Breaking

Sunday, 26 June 2022

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 27-ஆம் தேதி) காலை 10 மணிக்கு இன்று வெளியாகும் - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

இந்நிலையில்,தமிழகத்தில் கடந்த மே மாதம் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில்,இந்த பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 27-ஆம் தேதி) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அதன்படி,தேர்வர்கள்

https://tnresults.nic.in


என்ற இணைய தளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

அதே சமயம்,பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும்,தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment