
சென்னை: அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோக்கைக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் ஓரிரு நாள்களில் அறிமுகம் செய்ய வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உயா்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள், அந்தந்த கல்லூரிகளில் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக தனி நபா் இடைவெளியைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற அரசின் அறிவுறுத்தலைப் பின்பற்றி, இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து சமா்ப்பிக்கும் புதிய நடைமுறை அமலாக்கப்படவுள்ளது.
இதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சோவதற்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம், ஓரிரு நாள்களில், உயா்கல்வித் துறை சாா்பில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் விருப்பமான கல்லூரிகளை மாணவ, மாணவிகள் தோவு செய்து கொள்ளலாம். சோக்கையைப் பொருத்தவரையில், ஏற்கெனவே உள்ள நடைமுைான் பின்பற்றப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment