ரேஷன் அட்டை நமது அத்தியாவசிய ஆவணங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதன் அடிப்படையில்தான் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் அரசாங்க திட்டங்களின் நன்மைகளை பெறவும் ரேஷன் கார்டுகள் தேவையாக இருக்கின்றன.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் ரேஷன் கார்டில் (Ration Card) பதிவு செய்யப்பட்டிருக்கும். புதிதாக மணமுடித்து வீட்டுக்கு வரும் மருமகள் அல்லது புதிதாய் பிறந்த குழந்தை என அவ்வப்போது குடும்பத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகக்கூடும். அப்படி எண்ணிக்கை அதிகமாகும் போது அவர்களது பெயரை ரேஷன் கார்டில் சேர்ப்பது கட்டாயமாகும். ரேஷன் கார்டில் புதிய குடும்ப உறுப்பினரின் பெயரைச் சேர்ப்பதற்கான முழுமையான செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.
புதிய குடும்ப உறுப்பினரின் பெயரை இந்த வகையில் ரேஷன் அட்டையில் சேர்க்கலாம்
திருமணத்திற்குப் பிறகு புதிதாக ஒரு உறுப்பினர் குடும்பத்திற்கு வந்தால், முதலில் அவர் தனது ஆதார் அட்டையில் (Aadhaar Card) இந்த மாற்றத்தை புதுப்பிக்க வேண்டும். புதிதாக திருமணமான பெண்ணின் ஆதார் அட்டையில் கணவரின் பெயரை சேர்க்க வேண்டும்.
இதனுடன், முகவரியையும் மாற்ற வேண்டும் (Address Change). ஆதார் அட்டையில் புதிய விவரங்கள் சேர்க்கப்பட்டவுடன், ஆதார் அட்டையின் நகலுடன், உணவுத் துறை அதிகாரியிடம் ரேஷன் கார்டில் பெயரை சேர்க்க விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது முக்கியம்
ஒருவரது குடும்பத்தில் புதிதாக ஒரு குழந்தை பிறந்தால், முதலில் பிறந்த குழந்தையின் ஆதார் அட்டையை உருவாக்க வேண்டும். இதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் தேவைப்படும். இதற்குப் பிறகு, ஆதார் அட்டையுடன் ரேஷன் கார்டில் பெயரை பதிவு செய்ய விண்ணப்பம் அளிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
மேலே அளிக்கப்பட்டுள்ள வழிகளில், நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை அலுவலகத்திற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும். எனினும், வீட்டில் இருந்தபடியும் நீங்கள் புதிய உறுப்பினர்களின் பெயர்களை ரேஷன் கார்டுகளில் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, நீங்கள் உங்கள் மாநிலத்தின் உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்க்க வசதி இருந்தால், நீங்கள் வீட்டிலிருந்தபடியே இந்த வேலையைச் செய்யலாம்.
No comments:
Post a Comment