Breaking

Thursday, 11 November 2021

நாளை (நவ.13) விடுமுறை அறிவிப்பு!!

ராஜராஜசோழனின் 1036ஆவது சதய விழாவை முன்னிட்டு நாளை (13.11.21) அன்று தஞ்சையில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036 ஆவது சதய விழா நாளை (நவ .13) கொண்டாடப்பட உள்ளது . வழக்கமாக 2 நாட்கள் நடைபெறும் இவ்விழா , கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போல நடப்பு ஆண்டும் ஒருநாள் மட்டுமே நடத்தப்படுகிறது.


நாளை (நவ.13) காலை 7 மணிக்கு பெரிய கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன சிலைக்கு மாலை அணிவித்தல், 9 மணிக்கு பெருவுடையாருக்கு 36 வகை பொருட்களால் பேரபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு பெருந்தீப வழிபாடு, மாலை 6 மணிக்கு கோயில் பிரகாரத்துக்குள் சுவாமி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் நாளை ஒரு நாள் தஞ்சையில் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment