Breaking

Monday, 13 July 2020

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: 3-ஆவது இடத்தை பிடித்தது சென்னை மண்டலம்


சென்னை: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில், சென்னை மண்டலம் 3-வது இடத்தைப் பிடித்தது.

சி.பி.எஸ்.இ., நாடு முழுவதும் 16 மண்டலங்களின் கீழ் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வில் இந்த மண்டலங்களின் தேர்ச்சி சதவீதம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு ஆந்திரம் , தெலங்கானா , புதுச்சேரி, தமிழகம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலம், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன்படி சென்னை மண்டலத்தின் தேர்ச்சி விகிதம் 96.17 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்த சென்னை மண்டலம், தற்போது மூன்றாவது இடத்துக்கு பின் தங்கியுள்ளது.

எனினும் தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை 3.24 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, சென்னை மண்டலத்தின் தேர்ச்சி விகிதம் 92.93 ஆக இருந்தது. இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. நிா்வாகம் தகுதி பட்டியலை (மெரிட் லிஸ்ட்) வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment