Breaking

Monday, 27 June 2022

Polytechnic மாணவர்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை.! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.!

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி, பைசுஹள்ளியில்‌ செயல்பட்டு வரும்‌ 10ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவமாணவிகளுக்கு முதலாமாண்டு சேர்கை விண்ணப்பம்‌ மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐஐஐடி தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு 2022-23 கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கை விண்ணப்பம் இணையத்தில் https://www.tnpoly.in/ என்ற முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்போ உலகத்தில் சேரும் மாணவர்களுக்கான விடுதி கழகத்தின் அருகில் செயல்பட்டு வருகிறது. இப்பயிலகத்தில் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவி தொகை பெற்று வழங்கப்படுகிறது. மேலும் சிறப்பு கல்வி உதவித்தொகையாக மாணவிகளுக்கு Pragathi Scholarship ரூ.50,000 வரையிலும் மற்றும் ஊனமுற்ற மாணவர்களுக்கு Saksham Scholarship ரூ.50,000 வரை வழங்கப்படுகிறது.

இப்பயிலகத்தில் பயிலும் மாணவிகளுக்கு தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படவுள்ளது. மேலும் மாணவ மாணவிகளுக்கு Intership / Add On Course ஆகிய புதிய பயிற்சி திட்டங்களின் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து அருகே 2 அரசுப் பேருந்துகள் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்பட்டு வருகிறது. இவை மாணவ மாணவிகளுக்கு பயிலகம் வந்து செல்ல வசதியாக உள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பட்டப்படிப்பு முடித்த மாணவ மாணவியர் மாதம் ரூ.20,000 ஊதியம் பெறும் வகையில் பல்வேறு நிறுவனங்களில் கேம்பஸ் இன்டர்வியூ நடைபெறுகிறது. இதனை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி தர்மபுரி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment