Breaking

Monday, 13 July 2020

'ஆன்லைன்' கல்வியால் கண் பாதிப்பு? யோகா பயிற்சிக்கு முக்கியத்துவம்

அவிநாசி:இணையவழி கல்வியால், மாணவ, மாணவியரின் கண்கள் பாதிக்காமல் இருக்க, யோகாசன முறையில் பயிற்சி வழங்க, சில தனியார் பள்ளிகள் அறிவுரை வழங்கியுள்ளன.கொரோனா ஊரடங்கால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், 'ஆன்லைன்' முறையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே, கல்வி போதிக்க துவங்கிவிட்டன. 

பிரத்யேக செயலியால், பள்ளி நிர்வாகங்கள் கல்வி போதிக்க துவங்கியுள்ளன. சில பள்ளிகள், மாணவ, மாணவியருக்கு, கண் பராமரிப்பு சார்ந்த பயிற்சியை, வழங்க துவங்கியிருக்கின்றனதனியார் பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது;கடந்த ஒரு மாதமாக, மாணவ, மாணவியர் ஆன்லைன் முறையில், கல்வி பயில்கின்றனர். 

சிலருக்கு கண் வலி ஏற்பட்டு, கண்களில் இருந்து கண்ணீர் வருவதாகவும், பெற்றோர் சிலர் கூறுகின்றனர். எனவே, மாணவர் நலன் கருதி, அவர்களுக்கு கண் பராமரிப்பு சார்ந்த பயிற்சி வழங்குவது அவசியமாகி இருக்கிறது.யோகாசனத்தில், கண் பராமரிப்பு சார்ந்த பயனுள்ள பல பயிற்சிகள் உள்ளன. அவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, மாணவ, மாணவியருக்கு அனுப்பி வைத்து, பயிற்சி செய்ய அறிவுறுத்தி வருகிறோம். 

தொடர்ச்சியாக, மொபைல் போன் பார்த்தபடி இல்லாமல், குறிப்பிட்ட நேர இடைவெளியில், கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment