Breaking

Monday, 13 July 2020

'ஆன்லைன்' மூலம் வழிகாட்டி: வேலை வாய்ப்புத்துறை ஏற்பாடு

திருப்பூர்:ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டி நிகழ்ச்சி, 'ஆன்லைன்' மூலம் நேற்று நடந்தது.தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம், கடந்த 8 ம் தேதி துவங்கி, நாளை வரை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு நாள் நிகழ்ச்சியாக நேற்று, ஆசிரியர்கள் மற்றும் மாணவருக்கான தொழில்நெறி வழிகாட்டி நிகழ்ச்சி, 'ஆன்லைன்' மூலமாக நடந்தது.காலையில் ஆசிரியர்களுக்கும், மதியம், மாணவர்களுக்கும், 'ஆன்லைன்' மூலம் வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. வேலை வாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் லதா, முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் ஆகியோர், மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.உதவி இயக்குனர் சுப்பிரமணியன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ் ஆகியோர், தொழில்நெறி வழிகாட்டுதலில் ஆசிரியர் பங்கு, உயர்கல்வி வாய்ப்பு, போட்டித்தேர்வுகள் குறித்து எடுத்துரைத்தனர்.'ஆன்லைன்' மூலமாக நடந்த இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் என, 100 பேர் பங்கேற்று பயனடைந்தனர்.

No comments:

Post a Comment