Breaking

Wednesday, 7 July 2021

ஏடிம் கார்டு காணாமல் போய்விட்டதா.? பிளாக் செய்ய இந்த நம்பர் போதும்!

ஏடிஎம் கார்டு திருடு போனால் அல்லது தொலைந்து போனால் உடனடியாக பிளாக் செய்ய எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அழைப்பதற்கான நம்பர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பலரும் ஏடிஎம் கார்டு தொலைந்து போய்விட்டால் அல்லது திருடி போய்விட்டால் பதற்றம் அடைவார்கள். கார்டில் இருந்து பணத்தை எடுத்துவிடுவார்களோ என்று. பணத்தை அவ்வளவு எளிதில் எடுக்க முடியாது. ஆனால் பின் நம்பர் இல்லாமல் குறைந்த அளவில் செலவு செய்யமுடியம்.

ஆனால் யாரும் அச்சப்படதேவையில்லை. கார்டு தொலைந்த உடன் அதனை பிளாக் செய்யும் வசதி எல்லா கார்டுகளிலும் இருக்கிறது.

அந்த வகையில் எஸ்பிஐ வங்கி புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கார்டை பிளாக் செய்ய வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. டோன் ஃப்ரீ எண் வழங்கப்பட்டுள்ளது. அந்த எண்ணுக்கு உங்கள் மொபைல் மூலமாக கால் செய்து கார்டை பிளாக் செய்யலாம்.

1800 112 211 அல்லது 1800 425 3800 ஆகிய நம்பர்களுக்கு அழைத்து கார்டை நீங்களே பிளாக் செய்யலாம். உங்களது கார்டு லாக் ஆனவுடன் மெசேஜ் வரும். புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க நினைத்தாலும் அதே நம்பரை அழைத்து விண்ணப்பிக்கலாம்.

ஐவிஆர் மூலமான இந்த அழைப்பு சேவையில் 1, 2, 8, 9 போன்ற எண்களை அழுத்துமாறு கேட்கப்படும். அதில் கேட்கப்படும் தகவல்களுக்கு ஏற்றவாறு நீங்கள் எண்களை அழுத்தினாலே கார்டை பிளாக் செய்யவும் புதிய கார்டுக்கு அப்ளை செய்யவும் முடியும்.

No comments:

Post a Comment