Breaking

Sunday, 4 July 2021

ஆலமர உச்சியில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மாணவர்கள்!!


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே செல்போனுக்கு சிக்னல் கிடைக்காததால் மாணவ, மாணவிகள் ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இப்போது அனைத்தும் ஆன்லைன் தான். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தான் நடத்தப்படுகின்றன.

ஆன்லைன் வகுப்பு வசதி உள்ள மாணவர்களுக்கு ஏற்றது. ஆனால் பொருளாதார மற்றும் வளர்ச்சி அடையாத பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு சிரமம் தான்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முள்ளுக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஆன்லைன் வகுப்புக்காக கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பெரபஞ்சோலை மற்றும் பெரிய கோம்பை கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் ஆன்லைன் வகுப்பிற்காக ஆல மரங்களை நாடுகின்றனர்.


பெரப்பஞ்சோலை மற்றும் பெரிய கோம்பை சுற்றியுள்ள கிராமங்களில் செல்போன் டவர்கள் இல்லை. எனவே சிக்னல் கிடைக்காததால் கிராம புற மாணவ, மாணவியர் அங்கு உள்ள உயரமான ஆல மர கிளைகளில் ஏறி அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.

உயிரை பணயம் வைத்து உயரமான மரங்களில் ஏறி, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது மாணவ, மாணவியரின் பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த கவலைக்கு உள்ளாகி உள்ளனர்.

No comments:

Post a Comment