Breaking

Saturday, 5 June 2021

டிஎன்பிஎஸ்சியுடன் ஆசிரியா் தேர்வு வாரியம் இணைப்பா?அதிகாரிகள் மறுப்பு

ஆசிரியா் தேர்வு வாரியம் கலைக்கப்படுவதாக வெளியான தகவல்கள் தவறானது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் ஆசிரியா் தகுதித் தேர்வு ('டெட்'), பாலிடெக்னிக் விரிவுரையாளா் தேர்வு, உதவிப் பேராசிரியா் தேர்வு போன்றவற்றில் முறைகேடுகள், வழக்குகள் என்று ஆசிரியா் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து பல சா்ச்சைகள் எழுந்தன. இதனால் ஆசிரியா் தேர்வு வாரியம் கலைக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: ஆசிரியா் தேர்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்துடன் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை. ஆசிரியா் தேர்வு வாரியம் கலைக்கப்படுவதாக வெளியான தகவல்கள் தவறனாது. ஆசிரியா் தேர்வு வாரியத்தை, டிஎன்பிஎஸ்சியுடன் இணைக்கக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம் வலியுறுத்திய நிலையில், ஆசிரியா் தேர்வு வாரியம் கலைக்கப்படாது என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment