Breaking

Saturday, 5 June 2021

அரசு, அரசுஉதவி பெரும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் - மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு.!

ஜூன் மாதம் 20 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் தடுப்பூசி போட வேண்டும் என்று சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னையில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்.

ஜூன் மாதம் 20 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், தடுப்பூசி போட்ட சான்றிதழை பெற்று அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் அதற்குரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் " என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அலுவலர்கள் தடுப்பூசி போட்ட சான்றிதழ்களின் நகல்களை சேகரித்து வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment