''கல்லுாரி தேர்வுகளுக்கு, மாணவர்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும். 70 சதவீத வேலைவாய்ப்புகள் போட்டித்தேர்வு, திறனாய்வு மூலமே கிடைக்கும் என்பதால், மாணவர்கள் கட்டாயம் பாடத்திட்டம் தாண்டி படிப்பதும் முக்கியம்,'' என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:இனிவரும் காலங்களில் குறிப்பிட்ட துறையை படித்தால் தான், வேலைவாய்ப்பு என்பது இருக்காது. பல்துறை சார்ந்த அறிவை மேம்படுத்தினால் மட்டுமே வேலைவாய்ப்பு என்பதால், கல்லுாரி தேர்வுகளுக்கு தற்போது மாணவர்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும்.
வரும் காலங்களில், 70 சதவீதம் போட்டிகள், திறனாய்வு மூலமே நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்கும். கட்டாயம் ஜப்பானிஷ், ஜெர்மன் போன்ற பிற மொழிகளை கற்றுக்கொள்ளவேண்டும்.சர்க்கியூட் பிரிவுகளுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., இ.சி., இ.இ.இ., ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்., இரண்டாம் நிலை பிரிவுகளான ஆட்டோமொபைல், பெட்ரோலியம் புரொடக்சன், பார்மா போன்றவற்றுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புகள் குறையும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
கல்லுாரிகளை தேர்வு செய்வது எப்படி?எந்த கல்லுாரியில், 'சென்டர் ஆப் எக்சலன்ஸ்' அதிகமாக உள்ளது; பாடத்திட்டம் தாண்டி கற்பிக்கப்படுகிறதா, வெளிநாட்டு மொழிகள் கற்பிக்கப்படுகிறதா, தொழில்நிறுவனங்கள் நடத்தும் திறனாய்வு தேர்வுக்கு பயிற்சி வழங்கப்படுகிறதா, தொழில்துறைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளதா, ஆய்வகங்களில் நவீன வசதிகள் உள்ளதா, இன்டன்ஷிப் வாய்ப்புகள் அதிகம் வழங்கப்படுகிறதா என்பதை அறிந்து கல்லுாரிகளை தேர்வு செய்யவேண்டும். முன்னாள் மாணவர்களை கண்டறிந்து, இதுகுறித்து கேட்டு எளிதாக அறிந்துகொள்ள முடியும்.வேலைவாய்ப்புபொறியியல், தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்பு இல்லை என்பது தவறான கருத்து. வங்கி, நிதிநிறுவனம், மருத்துவம், மார்க்கெட்டிங், விவசாயம், உற்பத்தி எந்த துறையாக இருந்தாலும் பொறியியல் படிப்புக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் இத்துறைகளில் தொழில்நுட்ப திறன் கொண்ட பட்டதாரிகளின் தேவை அதிகம் உருவாகும்.
திறன்களை மேம்படுத்திக்கொள்ளவேண்டிது அவர்களின் பொறுப்பு.புதிய படிப்புகள்கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன் இன்ஜி., ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ், டேட்டா சயின்ஸ், பிசினஸ் சிஸ்டம், சைபர் செக்யூரிட்டி என பல்வேறு புதிய படிப்புகள் பெரும்பாலான கல்லுாரிகளில் துவக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட, சிறப்புத்துவம் பெற்ற இதுபோன்ற துறைகளை தேர்வு செய்யும்போது பிற துறை அறிவையும் மேம்படுத்தவேண்டியும் கட்டாயம் என்பதை உணரவேண்டும்.
சேர்க்கை எப்படி?
சேர்க்கைக்கு அவசரம் வேண்டாம். சற்று காத்திருந்து, அரசின் கவுன்சிலிங் மூலம் நல்ல கல்லுாரிகளை தேர்வு செய்யலாம். மதிப்பெண் குறைந்துள்ளது; கவுன்சிலிங்கில் நல்ல கல்லுாரி கிடைக்காது என்ற மாணவர்கள் மேனேஜ்மென்ட் பிரிவில் சேர தற்போது முயற்சிக்கலாம். பல்வேறு அரசின் சலுகைகள் கவுன்சிலிங் வாயிலாக சேரும் மாணவர்களுக்கே கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.இவ்வாறு, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
No comments:
Post a Comment