மாணவர்களின் ஆன்லைன் கல்வியில் பெற்றோர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் கல்வியில் பெற்றோரின் பங்கு குறித்த வழிகாட்டுதல்களை, அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், வீடுதான் முதல் பள்ளி என்றும், பெற்றோர்தான் முதல் ஆசிரியர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு, பாதுகாப்பான, நேர்மறையான சூழலை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும், எனத் தெரிவித்த மத்திய கல்வி அமைச்சகம், மாணவர்களை வயது வாரியாக கண்காணித்து, தேவைகளை கேட்டறிந்து, வழிநடத்த வேண்டியது அவசியம் என அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment