புதிய கல்வி ஆண்டு துவங்கி உள்ளதால், மாணவர்களின் விபரங்களை டிஜிட்டல் தளத்தில் புதுப்பிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் தொடர்ந்தாலும், இந்த மாதம், 1ம் தேதி முதல் புதிய கல்வி ஆண்டு துவங்கியுள்ளது. புதிய கல்வி ஆண்டில் வகுப்புகளை நடத்துதல் உட்பட பல்வேறு பணிகளை, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.
இதன்படி, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளி கல்வி முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. எனவே, மாணவர்களின் விபரங்களை, கல்வி மேலாண்மை டிஜிட்டல் தளமான, 'எமிஸ்' தளத்தில் புதுப்பிக்க வேண்டும். எமிஸ் தளம் வழியே, மாணவர்களுக்கு மாற்று சான்றிதழை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment