Breaking

Wednesday, 15 July 2020

மருத்துவப் படிப்பு சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் நன்றி


மருத்துவப் படிப்பு சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அமைச்ரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியதற்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக திருநெல்வேலி, தென்காசி மாவட்ட நிர்வாகிகள் முருகன், பாபுசெல்வன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நடவடிக்கை மூலம் தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 500 ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மருத்துவர் கனவு நிறைவேறும் என்பதில் சந்தேகம் இல்லை.

நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு இதுவரை நடத்தப்படாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம்பேர் விண்ணப்பிக்க ஏதுவாக மத்திய அரசுடன் கலந்து பேசி, நீட் தேர்வு நடத்தும் NTA-யிடம் உரிய அனுமதி பெற முயற்சி செய்ய வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணத்தை தமிழக அரசே செலுத்த முன்வர வேண்டும்.

1 comment:

  1. தவறானது! ஒரு தலைபட்சமானது! ஏதேச்சதிகாரமானது! போலி அக்கறை!மருத்துவ கல்வி தரம் கடுமையாக பாதிக்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் Course duration, teaching time, question paper, exam timing,paper valuation method எல்லாம் ஒரே மாதிரிதான்.அரசு பள்ளி மாணவர்கள் +1 ல் இருந்தே சரியான வழிகாட்டுதல் அளிக்கப்படவேண்டும்.தவறுகள், குறைகள் சரி செய்து தரத்தை உயர்த்த வேண்டும். இட ஒதுக்கீடு தேவையற்றது.

    ReplyDelete