கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக.
உரிய விடையினைத் தெரிவு செய்து எழுதுக. 7x1=7
1. சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) உழவு, மண் ஏர் மாடு
இ) உழவு, ஏர், மண், மாடு
ஈ) எர். உழவு . மாடு. மண்
2. "தன் நாட்டு மக்களுக்கு தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்" என்னும் மெய்க்கீர்த்தி தொடர் உணர்த்தும் பொருள்.
அ) மேம்பட்ட நிர்வாக திறன் பெற்றவர்
ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்
3. மெய்க்கீர்த்திகள் யார் காலந்தொட்டு கல்லில் வடிக்கப்பட்டன?
அ) முதலாம் இராசராசன்
ஆ) இரண்டாம் இராசராசன்
இ) முதலாம் ராசேந்திரன்
ஈ) இரண்டாம் ராசேந்திரன்
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.
"வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர விதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும் ".
4. இப்பாடலின் ஆசிரியர் யார்?
அ) கம்பர்
5. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
அ) காசிக்காண்டம்
ஆ) கொய்யாக்கனி
6. வண்ணமும் சுண்ணமும் இலக்கணம் தருக.
அ) எண்ணும்மை
7. விரை என்பதன் பொருள்-
அ) மனம்
ஈ) மேகம்
அனைத்து வினாக்களுக்கும் குறுகிய விடையளிக்க. 2×2=4
8. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?
- மன்னர்களின்வரலாற்றுநிகழ்வுகளைப்பலரும் எக்காலத்திலும் அறியவும்.
- அவர்களின் புகழ் அழியாமல் காப்பதற்கும் மெய்க்கீர்த்திகளைப் பாடினர்
- பாசவர் - வெற்றிலை விற்பவர்
- வாசவர் - நறுமணம் விற்பவர்
- பல்நிண விலைஞர் - பல வகை இறைச்சிவிற்பவர்
- உமணர் - உப்பு விற்பவர்
10. தூசும் துகிரும் ' எனத்தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலைப் பிழையின்றி எழுதுக.
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மருகும்;
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்; - இளங்கோவடிகள்
11. முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா கவி பாடுகிறார்?
- மண்பதமாகிறது.
- சூரியன்உதித்தது.
- காளைகளைவிரைவாகஓட்டினர்.
- மண்ணைஉழுதனர்.
- நாற்றுவளர்ந்தது. கொழுவைநாட்டினர்
12. பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்தி பாடலின் நயத்தை விளக்குக.
மெய்க்கீர்த்தி
நயம்:-
v
சோழன் நாட்டில் யானைகள் மட்டுமே பிணிக்கப்படுகினறன;
மக்கள் பிணிக்கப் படுவதில்லை.
’யாணையே பிணிபுண்பன’ |
v
நடனத்தின்போது சிலம்புகள் மட்டுமே புலம்புகின்றன;
மக்கள் எதற்காகவும் புலம்புவதில்லை.
”வடிமணிச்சிலம்பே யரற்றுவன” |
v
சோழன் நாட்டில் எப்போதும் நீர் ஓடுவதால் ஓடைகள்
மட்டுமே கலக்கம் அடைகின்றன; மக்கள் ஒருபோதும் கலங்குவதில்லை. நீர் மட்டுமே அடைக்கப்படுகின்றன;
மக்கள் ஒருபோதும் அடைக்கப்படுவதில்லை.
செல்லோடையே கலக்குண்பன வருபுனலே சிறைப்படுவன |
v
மாங்காய்கள் மட்டுமே வடுபடுகின்றன; மக்கள்
வடுபடுவதில்லை.
v
மலர்கள் மட்டுமே பறிக்கப்படுகின்றன; மக்களின்
உரிமைகள் சோழன் நாட்டில் பறிக்கப்படுவதில்லை.
மாவே வடுபடுவன மாமலரே கடியவாயின |
v
இங்கு, காடுகள் மட்டுமே கொடியவனவாக இருக்கின்றன;
மக்கள் கொடியவர்களாக இல்லை.
v
வண்டுகள் மட்டுமே கள் (தேன்) குடிக்கின்றன;
மக்களிடத்தில் அப்பழக்கம் இல்லை.
காவுகளே கொடியவாயின கள்ளுண்பன வண்டுகளே |
v
மலை மூங்கில் மட்டுமே வெறுமையாய் உள்ளது;
மக்களிடத்தில் வெறுமை இல்லை.
v
இளமான்களின் கண்களில் மட்டுமே மருட்சி உள்ளது;
மக்களிடத்தில் மருட்சி இல்லை.
v
குளத்து மீன்கள் மட்டுமே பிறழ்ந்து செல்கின்றன;
மக்களிடத்தில் பிறழ்ச்சி இல்லை.
v
நெற்கதிர்கள் மட்டுமே வயலில் போராக எழுகின்றன;
நாட்டில் போர் இல்லை.
v
புலவர்கள் பாட்டில் மட்டுமே பொருள் மறைந்திருக்கும்;
மக்கள் ஒருபோதும் தம் பொருள்களை மறைப்பதில்லை.
v
மன்னன் நெறியோடு நின்று காவல் காக்கிறான். தந்தை இல்லாதோருக்கு தந்தையாகவும் தாயில்லாதோருக்குத்
தாயாகவும் மகனில்லாதோருக்கு மகனாகவும் இருக்கிறான்.
தந்தையில்லோர் தந்தையாகியும் தாயரில்லோர் தாயராகியும் மைந்தரில்லொரு மைந்தராகியும் மன்னுயிர்கட்குயிராகியும் |
v
உலக உயிர்களுக்கு எல்லாம் உயிராகவும் இருக்கிறான்.
v
விழிபெற்ற பயனாகவும், மெய் பெற்ற அருளாகவும்
மொழி பெற்ற பொருளாகவும் புகழ்பெற்ற நூல் போலவும் திகழ்கிறான். புகழ் அனைத்திற்கும்
தலைவனாக இருந்து யாதும் புரிகிறான்.
விழிபெற்ற பயனென்னவும்
மெய்பெற்ற அருளென்னவும் மொழிபெற்ற பொருளென்னவும் முகம்பெற்ற பனுவலென்னவும் |
No comments:
Post a Comment