Sunday, 14 April 2024

ஒரு தனிநபர் ரூ.10 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்தால் ஐடி நோட்டீஸ் வரும் இது தெரியுமா உங்களுக்கும்?

ஒரு தனிநபர் அதிக மதிப்புள்ள ரொக்கப் பரிவர்த்தனைகளைச் செய்தால், வருமான வரித் துறையின் நோட்டீசை (Income Tax Notice) பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாத வருமானம், மற்ற வகைகளில் வருமானம் பெறக்கூடியவர்கள் எல்லோரும் வருமான வரி செலுத்த வேண்டும். இதையடுத்து ஒவ்வொரு வருடமும் ஜூன் - ஜூலை மாதங்களில் இந்த வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும்.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், அது வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். இந்தப் பணம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம். இப்போது நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் டெபாசிட் செய்வதால், இந்த பணத்தின் ஆதாரம் குறித்து வருமான வரித்துறை உங்களிடம் விளக்கம் கேட்கலாம்.

கார்டு நிலுவைத் தொகைக்கு ரூ.1 லட்சம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு மேற்பட்டவை கண்காணிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஒரு நிதியாண்டில் 10 லட்சங்கள் அல்லது அதற்கும் மேல் கிரெடிட் கார்டு பில்களை செட்டில் செய்தால் அதற்கு கணக்கு காட்ட வேண்டும். இல்லையென்றால் அதற்கும் நோட்டிஸ் அளிக்கப்படும். உங்கள் கிரெடிட் கார்டு தகவல் உங்கள் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால் வரி அதிகாரிகள் உங்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க முடியும். உங்கள் கிரெடிட் கார்டு தகவலுடன் பான் கார்டை இணைப்பதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் செலவழிக்கும் தொகையை அரசு உடனடியாகக் கண்காணிக்க முடியும். ITR (வருமான வரி அறிக்கை) சமர்ப்பிக்கும் போது இந்த பரிவர்த்தனை விவரங்களையும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்யும் போது, 30 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்வது நல்லதல்ல என்பதை தனிநபர்கள் அறிந்திருக்க வேண்டும்.இத்தகைய சூழ்நிலையில், இவ்வளவு பெரிய பரிவர்த்தனை காரணமாக, நீங்கள் பணத்தை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் என்று வருமான வரித்துறை கேட்கலாம்.

ஒரே டிரான்சாக்ஸனில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யக்கூடிய தொகை ரூ. 10 லட்சம். வருமான வரித்துறை, ரூ.100000க்கு மேல் முதலீடு செய்யும் சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளருக்கு நோட்டீஸ் அனுப்பும். அதேபோல் வங்கிக் கணக்கிலிருந்து 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக எடுத்தாலோ, போட்டாலோ அதற்கு கணக்கு காட்ட வேண்டும். இல்லையென்றால் நோட்டீஸ் வழங்கப்படும்.

பங்குகள், பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள் அல்லது பத்திரங்கள் வாங்க அதிக அளவு பணம் பயன்படுத்தப்பட்டால், இது வருமான வரித் துறையையும் எச்சரிக்கிறது. ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை செய்தால், அதன் தகவல் வருமான வரித்துறைக்கு சென்றடைகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பணத்தை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் என்று வருமான வரித்துறை உங்களிடம் கேட்கலாம்.

No comments:

Post a Comment