
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடத்தப்படாத 10 மற்றும் 12ம் வகுப்புகளின் எஞ்சிய தேர்வுகள் கைவிடப்பட்டது. இதனையடுத்து 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளைை கணக்கிடுவதற்கு விதிமுறைகளை சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
அதன்படி மாணவர்கள் 4 பாடங்கள் தேர்வு எழுதியிருந்தால் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும். 3 பாடங்கள் தேர்வெழுதியிருந்தால் அதிக மதிப்பெண் கொண்ட 2 பாடங்கள் மதிப்பெண் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும். 1 அல்லது 2 பாடங்கள் எழுதியிருந்தால் மாணவர்களின் உள் மதிப்பீட்டு மதிப்பெண் முறையில் மதிப்பெண் கணக்கீடப்படும்.
இந்தநிலையில், இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் 10 வகுப்பு தேர்வினை 18,73,015 மாணவர்கள் இந்த ஆண்டு எழுதியிருந்தனர். அதில், 17,13,121 தேர்வில் வெற்றிபெற்றனர். இந்த ஆண்டு 91.46 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 0.36 சதவீதம் தேர்ச்சிவிகிதம் அதிகரித்துள்ளது.
மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெறுவது, மறுமதிப்பீடு ஆகியவற்றை மாணவர்கள் மேற்கொள்ள இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்தி மேற்கொள்ளலாம் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment