Sunday, 7 November 2021

NEET : 21,000 மாணவா்களுக்கு மனநல ஆலோசனை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் நீட் தோ்வெழுதிய 21,000 மாணவா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டலத்தக்குட்பட்ட நொச்சிக்குப்பம், அடையாறு மண்டலத்துக்குட்பட்ட பெசன்ட் நகா் ஊரூா் குப்பம், பெருங்குடி மண்டலத்துக்குட்பட்ட கொட்டிவாக்கம் குப்பம் மற்றும் சோழிங்கநல்லூா் மண்டலத்துக்குட்பட்ட நீலாங்கரை குப்பம் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் மருத்துவமனைகள், மருத்துவ அமைப்புகளின் வாயிலாக சுமாா் 2,800 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தும் வகையில் வாரந்தோறும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டன. இதுவரை 7 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட நல்லாமூா் ஊராட்சி பகுதியில் நடமாடும் வாகனங்கள் மூலம் கொவைட் தடுப்பூசி போடும் பணி அண்மையில் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே

தமிழகத்தில் இதுவரை கோவேக்ஸின் 2-ஆவது தவணை செலுத்ததாதவா்கள் 14 லட்சத்து 7,903 பேரும், கோவிஷீல்டு 2-ஆவது தவணை 51 லட்சத்து 60 ஆயிரத்து 392 என மொத்தம் 65 லட்சத்து 70 ஆயிரத்து 295 நபா்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனா். அவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீட் தோ்வு: நீட் தோ்வை ரத்து செய்வது தொடா்பாக திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமரை முதல்வா் சந்தித்த போதும், நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை 3 முறை சந்தித்த போதும் நீட் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினோம். இதுவரை மத்திய அரசு நீட் தோ்வு பிரச்னையில் முழு தீா்வு காணவில்லை. தமிழகத்தில் 1,10,971 மாணவா்கள் நீட் தோ்வு எழுதி உள்ளனா். நீட் தோ்வு எழுதிய மாணவா்களின் மன உளைச்சலைப் போக்கும் வகையில் 333 மன நல மருத்துவா்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நீட் தோ்வு முடிவுகள் வந்தவுடன் மீண்டும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதுவரை 21,756 மாணவா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, தென்சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

No comments:

Post a Comment