தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் சண்முகநாததுரை தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.9ஆயிரம் வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் பணிக்கு சென்றுவர ரயில்வே நிர்வாகம் சீசன் டிக்கெட் நடைமுறையை கொண்டு வரவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
செயலாளர் சேகர், மாவட்ட இணைச்செயலாளர் ராஜமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment