Breaking

Friday, 16 July 2021

50% மாணவர்களுடன் செயல்பட அனுமதி. புதிய தளர்வுகள் என்னென்ன?

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19 ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில் மாநிலத்தின் கொரோனா நோய் தொற்று நிலையை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொரோனா அனைத்து மாவட்டங்களில் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தளர்வுகள் விபரம்:

ஐடிஐ போன்ற தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு பயிற்சி நிலையங்கள் 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாக பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்.

No comments:

Post a Comment