தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தனி அலுவலர் பதவிக்காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 30ஆம் தேதியுடன் தனி அலுவலர் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடக்கும்
வரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களது பதவிக்காலம் 6 மாதங்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் நடைப்பெற்ற சட்டப்பேரவை கூட்டத்தின் போது உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் சட்ட மசோதாக்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளளது.
No comments:
Post a Comment