Breaking

Wednesday, 23 June 2021

விரைவில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பதற்கு மத்திய அரசிடம் நிபுணர்கள் பரிந்துரை

மாணவர்கள் மீண்டும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வந்து படிப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்க்குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.

குறைந்த அளவிலான மாணவர்கள் வரும் வகையில் நேரத்தை மாற்றியமைத்தும் குறைத்தும் ஒருநாள் விட்டு ஒருநாளும் பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறக்கலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா இரண்டாவது அலை பின்வாங்குவதால் பல்வேறு மாநில அரசுகளும் பள்ளிமற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் ஹைதராபாத்தில் முழு அளவில் ஊரடங்கு நீக்கப்பட்டதால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஜூலை 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதால் இங்குள்ள கல்லூரிகள் மாணவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதிலும் மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதிலும் ஈடுபட்டுள்ளன

No comments:

Post a Comment