பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் கேட்டால், பள்ளி தலைமையாசிரியர் கையொப்பமிட்டு உடனே வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்காததால், ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்கள் கொண்டு, பள்ளி அளவில் மதிப்பெண் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காலாண்டு அல்லது அரையாண்டு தேர்வில், பாடவாரியாக பெற்ற அதிகபட்ச மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இரு தேர்வுகளிலும் பங்கேற்காதோருக்கு, 35 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இம்மதிப்பெண் சான்றிதழ் பள்ளி அளவில் வழங்கினாலும், அந்தந்த கல்வி மாவட்ட அலுவலருக்கும், மதிப்பெண் கணக்கிடப்பட்ட ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களை அலைகழிக்க கூடாதென தலைமை யாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில்,''சேர்க்கை தொடர்பாக, இயக்குனரகத்தில் இருந்து வரும் அனைத்து உத்தரவுகளும் உடனடியாக பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தலைமையாசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், அலைகழிக்க கூடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுசார்ந்த புகார்கள் இருப்பின், முதன்மை கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கலாம்,'' என்றார்.
No comments:
Post a Comment