பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பின் காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செயலாளர் கார்த்திகேயன் ஆலோசனை ஆகியோர் கடந்த திங்கள் அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். 
மேலும் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில் தற்பொழுது தமிழக அரசு முதலில் பாலிடெக்னிக் சேர்க்கை குறித்து முடிவெடுத்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வருடம்தோறும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான சேர்க்கை என்பது பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வந்தது தற்பொழுது தொற்று பாதிப்பின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 51அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கான 18 ஆயிரத்து 120 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பப் பதிவு இணைய வழியில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு, நேரடிஇரண்டாம் ஆண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் https://tngptc.in/ என்ற இணையதளம் வழியாக ஜூலை 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment