நீட் தேர்வு விவகாரத்தில் உயர்நிலை குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை, சமூக நீதியை நிலைநாட்டும் பொருட்டு தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ நுழைவுத்தேர்வு முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறும் வகையில் மாணவர் சேர்க்கைக்கு உறுதி அளிக்கப்படும் என்றும், நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைய தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.
ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் நீட் தேர்வு பாதிப்புகளுக்கு தீர்வுகள் காணப்படும்.
தற்போது மருத்துவம் பயில அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது, பிற மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment