1. பக்தி இலக்கியம் பெருமளவில் தோன்றிய காலம். பல்லவர் காலம்.
2. ஆழ்வார், நாயன்மார் பாடல்களில் எவற்றைப் பழிக்கப்படவில்லை துறவறம்.
3. பொய்கையாழ்வார் இயற்றிய முதல்திருந்தாதியின் பாவடிவம். வெண்பா
4. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய பாடல்கள் எண்ணாயிரமும்
5. திருநாவுக்கரசர் தாண்டகம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார்.
6. உருக்கமான திருவாசகப் பாடல்களைப் பாடிய மாணிக்கவாசகர்
7. பெண்கள் உட்கார்ந்து ஆடுவது அம்மானை.
8. நாட்டுப்பாடல்கள் ஏட்டுப் பாடல்களாக வடிவம் பெறுவதற்கு முன்னோடியாக விளங்கியவர் மாணிக்கவாசகர்.
9. திருமங்கையாழ்வாரும், மாணிக்கவாசகரைப்போல், நாட்டுப் பாடல்கள் சிலவற்றைப் பின்பற்றிப் பக்திப் பாடல்கள் பாடியுள்ளார்.
10. சங்க இலக்கியத்துள் காணப்படும் காதல் மரபுகளை அமைத்தும் திருமங்கையாழ்வார் பக்திப் பாடல்கள் பாடியுள்ளார்.
11. வண்டு, நாரை முதலியவற்றைத் தூது அனுப்பித் திருமாலின் அன்பை வேண்டச் செய்யும் பாடல்கள் சுவையானவை.
12. திருமங்கையாழ்வாரின் பெரிய திருமடலும், சிறிய திருமடலும் அவரது தனித்தன்மையை வெளிப்படுத்துவனவாகத் திகழ்கின்றன.
13. திருஞானசம்பந்தரால் பாடப்பட்டுள்ளது.
14. இவர் பாடியவை 16 ஆயிரம் பதிகங்கள், இன்று கிடைப்பவை 384 பதிகங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் கரக்கோயில் எனப்படும் ஒரே கோயில் மேலக்கடம்பூர் மட்டுமே.
15. பாலை நிலத்தை நெய்தல் நிலமாகும்படி பாடியது திருஞான சம்பந்தர்.
16. திருஞான சம்பந்தரின் பாடல்களை யாழில் பாடியவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். தருமபுரத்தில் (நீலகண்டர் பிறந்த ஊர்) யாழ்முரி பதிகம் பாடினார்.
17. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் முதன் முதலில் சந்தித்த இடம் திருப்புகலூர்.
18. பாம்பு தீண்டிய வணிகனின் விடம் தீர்த்த இடம் திருமருகல்.
19. மக்களின் குளிர்சுரத்தை நீக்கப் பதிகம் பாடிய இடம் செங்குன்றூர்.
20. முருகனின் திரு அவதாரமாகப் போற்றப்படுபவர் ஞானசம்பந்தர்
21. திருஞான சம்பந்த மூர்த்தி கோயில் ஒன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் பேய்க்கரும்பன்கோட்டை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது
22. சமண சமயத்தில் இருந்தபோது திருநாவுக்கரசர் தருமசேனர் என்றழைக்கப்பட்டார்.
23. திருநாவுக்கரசர் தொண்டு வழியில் இறைவனை வழிபட்டவர்.
24. நாவுக்கரசரின் வடமொழிப் பெயர்கள் வாக்கீசர்
25. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் உயிர் நீத்தார்.
26. ஒன்பது வகைக் கோயில்களில் கரக்கோயில் என போற்றப்படும் ஒரே தலம் மேலக்கடம்பூர் ஆகும்
27. சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார்
28. வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.
29. திருநாவுக்கரசரையே வழிபட்டவர் அப்பூதியடிகள் என்ற அந்தனர்.
30. திருநாவுக்கரசர் இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர்.
31. திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்தவர். சுந்தரர்
32. திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார்.
33. இறைவனையே தம் மனைவியிடம் தூது அனுப்பியதால் வன்தொண்டர் எனப்பட்டார்.
34. திருவாரூரில் பரவையாரையும்(கமலினி) திருவொற்றியூரில் சங்கிலியாரையும்(அநிந்தியை) மணந்தார்.
35. திருப்புகலூரில் செங்கல்லைப் பொன்னாக்கினார் சுந்தர்
36. சுந்தர் திருத்தொண்ட தொகையின் முதல் அடி “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்பதாகும்.
37. சுந்தரருடன் தொடர்பு கொண்டிருந்த ஆழ்வார் திருமங்கை ஆழ்வார்.
38. அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான்
39. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின்வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது
40. திருவாசகம் சிவபுராணம் தொடங்கி அச்சோபத்து ஈறாக 51 பிரிவுகளில் 656 (4 அகவல், 652 விருத்தங்கள்) பாடல்களைக் கொண்டுள்ளது
41. அம்மானை என்பது பெண்களின் கல் விளையாட்டு
42. சைவர்கள் வழிபாட்டின் போது பாடப்படுவது போற்றித்திருவகவல்.
43. திருவெம்பாவையில் 20 பாடல்கள் உள்ளன.
44. திருக்கோவையாரில் 400 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் உள்ளன.
45. இதற்குச் சிற்றம்பலக்கோவை என்ற வேறு பெயரும் உண்டு.
46. பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப் பேசவைத்தமை மாணிக்க வாசகர்.
47. சைவ வேதம் எனப்படுவது திருவாசகம்
48. திருவிசைப்பா என்று அழைக்கப்படுவது ஒன்பதாம் திருமுறை.
49. ஒன்பதாம் திருமுறையில் சிதம்பரத்தில் பாடப்பெற்ற பதிகங்கள் எத்தனை 16
50. புருடோத்தம நம்பி பாடிய பாடல்கள் 22
51. சேந்தனார் பாடியது திருப்பல்லாண்டு
52. ஒன்பதாம் திருமுறையில் அதிகளவான பாடல்களை பாடியவர் கருவூர்த்தேவர்
53. முட்டி நின்ற தில்லைக் கூத்தனின் தேரை ஓடச்செய்தது திருப்பல்லாண்டு
54. முழுவதும் இசைப்பாக்களால் ஆனது திருவிசைப்பா
55. திருமூலர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு
56. சேந்தனார் திருவெண்காட்டிற்கு அருகில் நாங்கூர் என்னும் ஊரில் தேன்றியவர்.
57. பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்காளராக இருந்தவர் சேந்தனார்
58. திருவிடைமருதூரில் இறைவனிடம் திருவடிதீட்சை பெற்றார்.கருவூர்த் தேவர்
59. கருவூர்த் தேவர் ஒரு சித்தர்ஆவார்
60. கண்டராதித்தர் இடைக்காலச் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தகனுக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர்.
61. திருமயிலையில் வைணவ அந்தணர் குலத்தில் தோன்றியவர். திருவாலியமுதனார்
62. இவர் வைணவக் குலத்தில் தோன்றிச்சிவபெருமானிடத்துப் பக்தி பூண்டு சிவனடியாராக விளங்கியவர் புருடோத்தம நம்பி
63. சேந்தனார் தனது மனைவி மக்களுடன் தில்லைக்குச் சென்று விறகு வெட்டி விற்று வாழ்வு நடத்தினார்.
64. பதினோராம் திருமுறையில் 22 வகையான சிற்றிலக்கியங்கள் காணப்படுகின்றது
65. காசுக்கடை என்பது நகைக்கடை
66. முருகப் பெருமான்மீது கல்லாடம் என்னும் நூல் பாடியவர்
67. சிவபெருமான் திரு இரட்டைமணிமாலையின் ஆசிரியர்
68. சங்கப்பாடல் நடைபோல் அமைத்துப் பாடல்கள் எழுதியவர் அதிராவடிகள்
69. கோயில் நான்மணிமாலையின் ஆசிரியர் பட்டினத்தார்
70. சடையனார் என்ற நாயனாரின் மனைவி இசைஞானியார்.
71. திருமால், இராமன் பற்றிய குறிப்புகள் அமைந்த இலக்கியம் சங்க இலக்கியம்.
72. நாலாயிரத் திவ்விய பிரபந்தம் எனத் தொகுத்தார் நாதமுனி.
73. திராவிட வேதம் என்று குறிக்கப்படுவது நாலாயிர திவ்யபிரபந்தம்.
74. திருப்பல்லாண்டு எத்தனைப் பாடல்களைக் கொண்டது 12
75. பொய்கையாழ்வார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 100
76. பொய்கையாழ்வார் பிறந்த ஊர் காஞ்சிபுரம்
77. கதாயுதத்தின் அம்சமாகப் பிறந்தவர் பூதத்தாழ்வார்.
78. சூரியனை விளக்காக ஏற்றியவர் பொய்கையார்
79. குருக்கத்தியில் அவதரித்தவர் பூதத்தாழ்வார்
80. திருவெஃகா என்பது காஞ்சிபுரம்
81. கருடாழ்வார் அம்சமாகப் பிறந்தவர் பெரியாழ்வார்
82. கண்ணனைக் குழந்தையாகப் பாவித்துப் பாடியவர் பெரியாழ்வார்
83. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் கலியன்
84. தொல்காப்பியரின் அகநெறிக்கு முரணாகப் பாடியவர் திருமங்கையாழ்வார்
85. நம்மாழ்வாரைத் தெய்வமாகப் போற்றியவர் மதுரகவியாழ்வார்
86. திருப்பாணாழ்வார் பிறந்த ஊர் உரையூர்
87. திருவரங்கக் கோவிலுக்குள் செல்ல இயலாது காவிரிக் கரையில் நின்று பாடியவர் திருப்பாணாழ்வார்.
88. திருவாய்மொழிக்கு முதன் முதலாக உரை வகுத்தவர் ஆளவந்தான் பிள்ளை.
89. ஆழ்வார்களைத் தொடர்ந்து வைணவம் வளர்த்தவர்கள் ஆச்சாரியர்கள்
90. வைணவத்தின் முதல் ஆச்சாரியார் நாதமுனி
91. இராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வார்
92. குருவின் கட்டளையை மீறி நாலாயிரதிவ்ய பிரபந்தத்தை அனைவருக்கும் சொன்னவர் இராமானுஜர்.
93. பரதன் மனைவி மாண்டலி.
94. வில்லிபுத்துரார் பிறந்த ஊர் சனியூர்.
95. சந்தப்பா பாடுவதில் வல்லவர் வில்லிபுத்துரார்
96. ஐந்தாம் வேதம் எனப் போற்றப்படுவது மகாபாரதம்
97. கம்பர் தம் ராமாயணத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம்
98. திருக்குருகைப் பெருமாள் பிற்றை உரை 6000படி
99. தாண்டகம் பாடிய ஆழ்வார் திருமங்கை ஆழ்வார்
100. திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் பித்து என்று கூறியவர் இராமானுஜர்
Friday, 14 May 2021
பக்தி இலக்கியம் Question And Answer - All Exam Study Materials
TNPSC
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment