இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில், பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தினர், நோய்வாய்ப்பட்டவர்களின் குழந்தைகள் உள்ளிட்ட நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை நடத்தப்படுகிறது.
இதில், இந்த சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் குழந்தைகள், 25 சதவீதம் கட்டணமில்லாமல் பள்ளிகளில் படிக்கலாம்.
விண்ணப்பங்கள், நேற்று முதல், பதிவேற்றம் செய்ய அரசு அறிவித்துள்ளது.விண்ணப்பங்களை, rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment