கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மத்திய அரசு 4ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்தது.
அதில், செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு பிறகு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்த முறையில் ஊரடங்கு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நான்காம் கட்ட பொது முடக்க தளர்வுகளில் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார அரசியல் நிகழ்வுகள் 100 பேருடன் நடத்தவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி கலையரங்கம், திரையரங்குகள் செயல்படும் என்று கூறியுள்ள மத்திய அரசு, செப்டம்பர் 30 வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு தடை தொடரும் என அறிவித்துள்ளது.
செப்டம்பர் 21 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50 சதவீத ஆசிரியர்கள், பணியாளர்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு பிறகு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம், ஆனால் கட்டாயமல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment