
கரோனா அச்சுறுத்தலால் 78 சதவிகித பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தைகளுக்கு கல்வி ஆண்டு முழுவதும் வீணாவது குறித்து எந்த வித கவலையும் இல்லை என்றும் முடிவுகளில் தெரியவந்துள்ளது.
தனியார் கல்வி நிறுவனம் சார்பில் 3,600 மாணவர்கள் மற்றும் மற்றும் அதே எண்ணிக்கையிலான பெற்றோர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. கரோனா தொற்று பரவி வரும் நிலையில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் 82 முதல் 86 விழுக்காடு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு தயக்கம் காட்டுவதாக தெரியவந்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகர்புற பகுதியை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்காலும், கல்விநிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாததாலும், 50 சதவிகித குழந்தைகளின் தூங்கும் முறை மாறிவிட்டதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 13 சதவிகித குழந்தைகள் முறையற்ற தூங்கும் விதத்தை பழகியுள்ளனர்.
தொற்று நோயின் காரணமாக ஏற்பட்ட பயத்தால் 40 சதவிகித குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தூக்கமின்மை ஏற்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment