இதையடுத்து, சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் துவங்கியது. முதல் கட்ட மாணவர் சேர்க்கை வரும், செப்., 4 வரை நடக்கிறது. இந்நிலையில் வரும், 31 முதல் ஆன்லைன் மூலம், முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க, மாநில கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, பேராசிரியர்கள் கூறியதாவது: மாணவர் சேர்க்கையின் போது, கடந்த கல்வியாண்டில் பெறப்பட்ட கட்டணத்தையே, நடப்பு கல்வியாண்டிலும் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், 2020-21ம் ஆண்டு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை, விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரும், 31 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம், வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி முதல்வர்கள் மாணவர் சேர்க்கை தொடர்பான விபரங்களை, பாட வாரியாக அந்தந்த மண்டல இணை இயக்குனர்களுக்கு நாள்தோறும் தெரிவிக்க வேண்டும்; பிறகு அவற்றை ஒருங்கிணைத்து மாநில கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கவும் உத்தர விடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment