Breaking

Friday, 28 August 2020

அரசு ஐடிஐயில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்



திருவள்ளுர் மாவட்டம் வடகரை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்கல்வி பெறுவதற்காக அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.09.2020. இதில், பிட்டர், எலக்ட்ரிஷியன், மெக்கானிக், மோட்டார், வெகிக்கில் பிரிவுகளில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வெல்டர், வயர்மேன் பிரிவுகளில் சேர 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

14 வயது முதல் 40 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்பக் கட்டணம் ₹50 செலுத்த வேண்டும்.மேலும், விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் அல்லது வடகரை ஐடிஐ (044 - 29555659), மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம், திருவள்ளுர் (044 - 29896032) மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளுர் (044-27660250) ஆகியசேர்க்கை உதவி மையங்களை அணுகலாம் என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment