Breaking

Saturday, 19 October 2024

சிலபதிக்கார மருவூர்ப்பார்க்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

மருவூர்ப்பாக்க வணிக வீதி:
  • பூ மற்றும் நறுமண பொருட்கள் விற்றனர்.
  • பட்டு,பருத்தி நூல் ,பவளம்.முத்து முதலியனவும் விற்றனர்.
  • தானியக்கடைகள் இருந்தன.
  • ஏழு வகை இசைகளையும் இசைத்தனர்.
  • பாசவர் வெற்றிலை விற்றனர்.
  • பல்நிண விலைஞர் இறைச்சி விற்றனர்.
  • உமணர்கள் உப்பு விற்றனர்.
  • ஓசுநர் எண்ணெய் விற்றனர்.
  • ஓவியர்,சிற்பிகள் இருந்தனர்.
  • கைத்தொழில் பலரும் செய்தனர்.
இக்கால வணிக வளாகம்:
  • பொருள்களை வேதிப்பொருள்கள் கொண்டு பதப்படுத்தி விற்கின்றனர்.
  • நெகிழி பைகளுள் அடைக்கப்பட்ட பொருள்களையே அதிகமாக விற்கின்றனர்.
  • துரித உணவகம், நவீன கலாச்சார உணவகம் முதலியவற்றில் அதிக விலைக்குப் பொருள்களை விற்கின்றனர்.
  • அங்காடிகளில் அனைத்து வகை பொருட்களும் விற்கப்படுகின்றன.
  • இணைய வழியிலும் வணிகம் நடைபெறுகிறது.
ஒப்பீடு:
  • இக்கால வணிகம் முற்கால வணிகத்தைவிட பொருட்களைத் தயாரிப்பதிலும் சந்தைப்படுத்துவதிலும் மேம்பட்டுள்ளது.
  • ஆனால், வணிகத்தில் அறம் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகிறது.
  • மேலும், பொருட்களின் தூய்மையும் குறைந்துகொண்டே வருகிறது.
  • உடல் நலத்தைக் கருத்தில் கொள்ளாமல் விற்பனையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பொருள்கள் தயாரிக்கவும் விற்கவும் செய்கின்றனர்.

No comments:

Post a Comment