பொருளடக்கம் |
v
முன்னுரை v
வறுமையால் இழந்த கல்வி v
செவிச்சில்வம் பெற்றேன் v
புத்தகப்பித்தன் v
பேராயக்கட்சியில் ம.பொ.சி v
ஆறுமாத கடுங்காவல் தண்டனை v
‘தமிழகம்’ பற்றிய கனவு v
சென்னையை மீட்டோம் v
தெற்கெல்லைப் போராட்டம் v
முடிவுரை |
முன்னுரை
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பலரும் ஈடுபட்டு இந்திய விடுதலைக்காக தம் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர். அவ்வகையில் ஞானப்பிரகாசம் என்னும் இயற்பெயரைக் கொண்ட ம.பொ. சி அவர்களின் நாட்டுப்பற்றினை இக்கட்டுரையில் காண்போம்.
வறுமையால் இழந்த கல்வி
பாடப்புத்தன்கங்கள் வாங்கவில்லை என்னும் காரணத்தினால் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே என் ஆசிரியர் என்னை வகுப்பிலிருந்து விரட்டினார். அதை என் தந்தையார் கேட்டு அவரை வைதார் . அன்றுடன் என் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வந்துவிட்டது. மூன்றாம் வகுப்பிற்கு அன்று தேவைப்பட்ட தமிழ் , ஆங்கில புத்தகங்களைக் கூட என்குடும்பத்தால் எனக்கு வாங்கித் தர இயலவில்லை. அதனால் என் படிப்பும் நின்றுவிட்டது.
செவிச்செல்வம் பெற்றேன்
என் தாயார் எனக்கு பயிற்றிவித்த பாக்களே எனக்கு பால பாடங்களாக அமைந்தன. அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகிய அம்மானைப் பாடல்களைப் பாடுவார். அது என் மனதில் பதிந்தது. இளம் வயதில் நானே சித்தர் பாடல்களை விரும்பிப்படித்தேன். சொற்பொழிவுகளை கேட்டதன் மூலமாக நான் இலக்கிய அறிவு பெற்றேன்.
புத்தகப்பித்தன்
நூல வாங்குவதற்குப் பணம் இல்லாத காரணத்தினால் பழைய புத்தகக் கடைக்குச் சென்று எனக்கு விருப்பமான புத்தகங்களை மிகமிகக் குறைவான விலையில் வாங்கிக்கொள்வேன். உணவுக்காக வைத்திருந்த பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு பல நேரம் பட்டினி கிடந்துள்ளேன். என்னிடம் உள்ள சொத்துக்கள் பல்லாயிரம் நூல்களே தவிர வேறொன்றும் இல்லை.
பேராயக்கட்சி
1931 இல் காந்தி – இர்வின் ஒப்பந்த காலத்தில் நாடு முழுவதிலுமிருந்த பேராயக் கட்சிக்காரர்கள் ஆக்க வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்நிய த் துணிக்கடை மறியல் , காந்தி –இர்வின் ஒப்பந்தப்படி அனுமதிக்கப்படவில்லை. ஆகவே தீண்டாமை விலக்கு, கதர் விற்பனை ஆகியவற்றிலே பேராயக் கட்சிக்காரர்களை ஈடுபடுத்தியது கட்சி தலைமை. நானும் அதில் கலந்து கொள்வேன்.
ஆறுமாத கடுங்காவல் தண்டனை
1932இல் மூவேந்தர்களின் பெருமைகளைக் கூறி விடுதலைப் போரில் கலந்துகொள்ளுமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்து அதை கையேட்டு பிரதிகளாக எழுத்தி”தமிழா துள்ளி எழு” என்னும் தலைப்புடைய துண்டறிக்கை ஒன்றைக் கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடையே வழங்கியதற்காக நான் சிறையில் அடைக்கப்பட்டேன். மூன்று மாதம் கடுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் எனக்கு விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத்தவறியதால் மேலும் மூன்று மாதம் கடுங்காவல் தண்டனைக்கு ஆட்பட்டேன்.
தமிழகம் பற்றிய கனவு
இந்திய விடுதலைக்குப் பிறகு மாநிலங்களை மொழிவாரியாகப் பிரித்தனர். அப்போது ஆந்திரத் தலைவர்கள் சித்தூர் மாவட்டம் முழுவதையும் புதிதாக அமையவிருக்கும் ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினர். மங்கலக்கிழாரின் தமிழரசுக் கழகம் அதைக் கடுமையாக எதிர்த்து மாநாடு நடத்தியது. அதில் கலந்துகொண்ட எங்களைத் தனித்தனி சிறையில் அடைத்தது. இறுதியில் சித்தூர் முழுவதையுமே ஆந்திராவுடன் தந்துவிட்டனர்.
சென்னையை மீட்டோம்
ஆந்திர மாநிலம் பிரியும் போது அதற்கு சென்னையே தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆங்கிலத் தலைவர்கள் விரும்பினர். அந்நாள் முதல்வர் இராஜாஜி நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தலைநகர் காக்க தன் முதலமைச்சர் பதவியையே துறக்க முன்வந்தார். அப்போது மாநகரத் தந்தை செங்கல்வராயனுடன் சேர்ந்து “தலையைக் கொடுத்தேனும் தலைநகர் காப்போம்” என்று முழங்கினோம். அந்த தீர்மானத்தாலே சென்னை நம் தலைநகர் ஆனது.
தெற்கெல்லைப் போராட்டம்
1953-54 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் முடியாட்சியிலிருந்து தமிழக தெற்கெல்லைப் பகுதிகளை மீட்கப் போராடினோம். திருவிதாங்கூர் ஆட்சி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எங்களுடன் போராடிய பலரும் இறந்தனர். அந்த சமயத்தில் திருவிதாங்கூர் ஆட்சி கவிந்து கேரள் அரசு உருவானது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாங்கள் மேற்கொண்ட போராட்டத்தால் தமிழகப் பகுதிகள் தமிழருக்கே கிடைத்தது.
முடிவுரை மலையும் கடலும் ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாகும். அந்த எல்லைகளை மீட்டுக்கொடுத்ததில் என் பங்களிப்பு இருந்தது எனக்கு ப் பெருமையே!
No comments:
Post a Comment