பிரதமரின் கிசான் திட்டத்தில் இன்னும் இணையாத விவசாயிகள் மொபைல் போன் மூலம் எளிதாக இணையதால் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இன்னும் பல விவசாயிகள் இணையாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த திட்டத்தில் ஸ்மார்ட் போன் மூலம் எளிதாக இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இருப்பதால் வீட்டிலிருந்தே விண்ணப்பிப்பது பாதுகாப்பாக இருக்கும்.
https://pmkisan.gov.in/. என்ற இணைய பக்கத்திற்கு சென்று ' Farmers Corner' என்பதை கிளிக் செய்ய வேண்டும் . திறக்கும் புதிய பக்கத்தில் ஆதார் எண்ணை பதிவிட்டு 'Click here to continue' என்பதை கிளிக் செய்யவும் .
பின்னர் பதிவுக்கான விண்ணப்பத்தில் மாநிலம் , மாவட்டம் , கிராமம் , பிரிவு , பாலினம் , தாய் - தந்தை - கணவன் பெயர் , முகவரி போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும் .
நிலத்தின் அளவு மற்றும் நில ஆவணம் தொடர்பான விவரங்களை அடுத்து பதிவிட வேண்டும் . பின்னர் 'save' கொடுக்க வேண்டும் .
பயிரிடக்கூடிய நிலங்களை வைத்துள்ள விவசாயக் குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் . இதுவரை எட்டு தவணைகளாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த தவணைப் பணம் வருவதற்குள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் .
No comments:
Post a Comment