Breaking

Saturday, 13 April 2024

சியா விதைகள் கலந்த மோர்... இதை விட சிறந்த ப்ரோபயோடிக் உணவு எதும் இல்லை!


கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் அதே வேளையில், ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும், சில உணவுகளில் மோர் முதலிடம் பிடிக்கிறது.

அதிலும், சில உணவௌ பொருட்களை அதனுடன் சேர்க்கும் போது, வியக்க வைக்கும் பலன்களை பெறலாம். சில உணவுகளின் கூட்டனி, அதனை சூப்பர் உணவின் அந்தஸ்தை கொடுக்கும். அத்தகைய ஒரு அற்புதமான கலவை தான் சியா விதைகள் மற்றும் மோர். சியா விதைகள் கலந்த மோர், உங்களுக்கு முழுமையான ஊட்டச்சத்தை அளிப்பது மட்டுமல்லாமல் உடல் வலிமையையும் தருகிறது. இது கோடை காலத்திற்கான சிறந்த பானமாக இருக்கும். மிக சிறந்த ஆரோக்கியமான ப்ரோபயாடிக் உணவினை உட்கொள்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

1. ஊட்டச்சத்த்தின் களஞ்சியம்

உடல் சீராக செயல்படவும் ஆரோக்கியமாக இருக்கவும் (Health Tips) ஊட்டச்சத்து தேவை. சியா விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மோரில் ரிபோஃப்ளேவின், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. எனவே, அவை உங்களுக்கு முழுமையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.

2. எடை இழப்புக்கான சிறந்த பானம்

உடல் எடையை சட்டென்று குறைக்க விரும்பினால், சியா விதைகளால் கலந்த மோர் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இரண்டு சூப்பர்ஃபுட்களும் அதிக நார்ச்சத்து நிறைந்தவை. உங்களுக்கு வயிறு நிறைந்த உனர்வைத் தரும். மேலும் நீண்ட நேரம் பசி ஏற்படாது. கூடுதலாக, இவற்றில் மிகக் குறைவான கலோரிகளே உள்ளன.

3. செரிமானம் மேம்படும்

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், பெரும்பாலானோர் செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், சியா விதைகள் கலந்த மோர் மிகச் சிறந்தது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பலன் தெரியும். அதிக நார்ச்சத்து இருப்பதால் வயிற்றை நன்கு சுத்தம் செய்கிறது. மோரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடலை ஆரோக்கியமாக்கும்.

4. ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்

சியா விதைகளில் இருந்து கிடைக்கும் மோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இது கார்போஹைட்ரேட்டுகளை சர்க்கரையாக மாற்றும் செயல்முறையை மந்தமாக்குகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இது நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.

5. இதயம் ஆரோக்கியம்

சியா விதைகளின் மோர் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில் ஏராளமான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது வீக்கத்தைக் குறைக்கிறது. ஆரோக்கியமான இந்த சூப்பர் மோர் மூலம் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் கொழுப்பு குறைவாக இருப்பதால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளது.

6. நீர்சத்தை அள்ளி வழங்கும்

கோடைக்காலத்தில் உடலில் நீர் சத்து குறையாமல் வைத்திருப்பது மிகவும் அவசியம். சியா விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த ஆரோக்கியமான மோர் இந்த வேலையை திறன்பட செய்கிறது. இந்த மோர் உங்கள் உடலின் திரவ சமநிலையை பராமரிக்கிறது. இது உங்களுக்கு ஆற்றலையும் அள்ளித் தருகிறது.

7. நினைவாற்றல்

சியா விதைகளின் மோர் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இதில் உள்ள மெக்னீசியம் தூக்கத்தை மேம்படுத்துகிறது. இந்த மோர் உங்கள் நினைவாற்றலைக் கூர்மைப்படுத்தி, கவனச் சிதறல் ஏற்படாமல் பாதுகாத்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

8. எலும்புகள் ஆரோக்கியம்

வலுவான எலும்புகளுக்கு கால்சியம் சத்து அவசியம். சியா விதைகள் மோர் கால்சியத்தின் நிறைந்துள்ளது. சியா விதைகள் மற்றும் மோர் பானத்தை தினசரி அருந்துவது எலும்புகளை பலப்படுத்துகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கிறது.

No comments:

Post a Comment