Wednesday, 5 October 2022

மத்திய அரசு கல்வி உதவித்தொகை கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.அதன்படி, பள்ளிப் படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக, 'எஸ்.எஸ்.பி.,' ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

தகுதியான மாணவர்கள் பள்ளி படிப்புக்கு செப்., 30ம் தேதி வரையும், பள்ளி மேற்படிப்புக்கு இம்மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.தற்போது பள்ளி மாணவர்களுக்கு, இம்மாதம் 15ம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்புக்கு, நவ., 15ம் தேதி வரையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment