Breaking

Wednesday, 22 June 2022

இனி மார்க் அடிப்படையில் தான் குரூப்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மதிப்பின் அடிப்படையில் மட்டுமே 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பாடப் பிரிவுகளை பரிந்துரை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யாமல் 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கீடு வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டியல் இன மாணவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாக இருந்தாலும் இட ஒதுக்கீட்டை பின்பற்ற பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் எந்தவித புகாருக்கும் இடமில்லாமல் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment