Breaking

Tuesday, 21 June 2022

டிடிஎஸ் வரி பிடித்தத்தில் புதிய விதி.. ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது..!

டி.டி.எஸ். எனப்படும் மூல வரி பிடித்தம் தொடர்பான நடைமுறையில் புதிய விதிமுறை ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நிறுவனங்கள், ஊழியர்களின் ஊதியத்தில் மூல வரி பிடித்தம் செய்கின்றன. வருமான வரி கணக்கு தாக்கலில், வரிவிலக்கு முதலீடுகள் அடிப்படையில், பிடித்தம் செய்த மூல வரியை திரும்பப் பெறலாம்.

இந்நிலையில், வருமான வரி சட்டத்தில் புதிதாக '194-ஆர்' என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய நிதி அமைச்சக இணை செயலர் கமலேஷ் வர்ஷ்னே கூறியதாவது; "மூல வரி பிடித்தம் தொடர்பான புதிய விதிமுறை ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் பெறும் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட இலவச மாதிரி மருந்துகளுக்கு மூல வரி பிடித்தம் செய்யப்படும். இது, அரசு மருத்துவமனைகளுக்கு பொருந்தாது.

அதுபோல, இலவச வெளிநாட்டு பயண டிக்கெட் அல்லது ஐ.பி.எல். போட்டிக்கான இலவச வெளிநாட்டு பயண டிக்கெட்டுக்கும், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கு மூல வரி பிடித்தம் செய்ய வேண்டும்.

சமூக ஊடகங்களில் செய்யப்படும் விளம்பரம் மூலம் ஆண்டு வருவாய் 20 ஆயிரம் ரூபாயைத் தாண்டும் பட்சத்தில் மூல வரி பிடித்தம் செய்ய வேண்டும். அதே சமயம், ரொக்கத் தள்ளுபடி, விற்பனை சலுகை ஆகியவற்றுக்கு, புதிய விதிமுறை பொருந்தாது" என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment