Breaking

Wednesday, 2 February 2022

தொழிற்கல்வி பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியரின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இத்தகவலை அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை மூலம் அறிவித்து படிப்புதவித் தொகை பெற விரும்பும் ஆசிரியர்கள் 28. 02. 22 க்குள் இணைப்பில் உள்ள விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து ஆணையர் , பள்ளிக் கல்வி , டி.பி.ஐ. வளாகம் , கல்லூரி சாலை சென்னை - 6 என்ற முகவரிக்கு நேரிடையாக அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment