தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் TC உள்ளிட்ட எவ்வித ஆவணமும் இல்லாமல், நேரடி சேர்க்கை மூலம் அரசு பள்ளிகளில் சேருவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
கொரோனா 2 ஆம் அலை காரணமாக பள்ளி மாணவர்களுக்கான புதிய 2021-22 ஆம் கல்வியாண்டு தாமதமாக துவங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இந்த ஆண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் மற்ற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான புதிய பாடங்கள் கல்விதொலைக்காட்சி வாயிலாக இன்று (ஜூன் 19) முதல் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என கூறி அம்மாணவர்களின் TC ஆவணங்களை திரும்ப கேட்டதற்கு சில தனியார் பள்ளிகள் ஆவணங்களை தர மறுத்துள்ளது. தவிர அம்மாணவருக்கான இந்த ஆண்டு கல்வி கட்டணதை செலுத்தினால் தான் அவர்களது TC உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்கமுடியும் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த காரணங்களால் அரசு பள்ளிகளில் சேர முடியாத மாணவர்களுக்கு எவ்வித ஆவணமும் இல்லாமல், நேரடி சேர்க்கை மூலம் பள்ளிகளில் சேருவதற்கான அரசாணை (189 - RTE ACT 2009) வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் RTE ACT- ன் படி 6 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களை, அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ப, பள்ளிகளில் சேர்ந்து படிக்க செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாணவர்களின் TC உள்ளிட்ட ஆவணங்களை தர மறுக்கும் பள்ளிகள் மீது, மாவட்ட கல்வி அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment