Breaking

Sunday, 20 June 2021

இனி பள்ளிகளில் சேர T C தேவையில்லை; இந்த எண் இருந்தால் போதும்..

கொரோனா தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கிய நிலையில், முதல் அலையை விட இரண்டாவது அலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் தங்களின் வீடுகளிலேயே ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் படித்து வருகின்றனர்.

மேலும், கொரோனவால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை, எளிய மக்களால் அவர்களது குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்துவது சாத்தியமற்றதாக மாறியிருக்கிறது. தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்டி தொடர்ந்து படிக்க முடியாத நிலையில், அவர்களுக்கு அடுத்துள்ள வாய்ப்பு அரசு பள்ளிகளில் சேருவது தான். ஓரளவு வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தி மாற்றுச் சான்றிதழ் பெற்று குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து விட்டுள்ளனர்.

ஆனால், தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை செலுத்த முடியாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு அத்தகைய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனால், படிப்பை பாதியில் நிறுத்தும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், அனைவருக்கும் கல்விச் சட்டத்தின்படி அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதால், தனியார் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், மாற்றுச்சான்றிதழ் (டி.சி.) இல்லாமலேயே அரசு பள்ளிகளில் அவர்கள் படிக்க வேண்டிய வகுப்பில் சேர்ந்து கொள்ள முடியும்.

மாணவர் சேர்க்கையின் போது அவர்கள் ஆதார் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. தமிழக அரசின் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (Educational Management Information System) அனைத்து மாணவர்களைப் பற்றிய தகவல்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்தத் தகவல்கள் மாணவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதால், ஆதார் எண் மூலம் மாணவர்களின் கல்வி சார்ந்த தகவல்களை எளிதாக பெற முடியும். அவற்றைக் கொண்டு மாணவர்களுக்கு அரசு பள்ளிகளே புதிய மாற்றுச்சான்றிதழை உருவாக்கி விட முடியும்.

No comments:

Post a Comment