கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனாலும் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட போது, 2ஆம் அலையின் காரணமாக மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நிலையில் , தனியார் பள்ளிகள் 75 % கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி பள்ளிகள் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கக்கூடாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment