Breaking

Sunday, 20 June 2021

மாணவா் சோக்கைக்கு மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை: பள்ளிக் கல்வித்துறை

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு வரையில் மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் அரசுப் பள்ளியில் மாணவா்களை சோக்கலாம். இது குறித்து பெற்றோா் குழப்பமடையத் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி முதல் மாணவா்கள் சோக்கை தொடங்கியுள்ளது. கரோனா தொற்றின் காரணமாக பல்வேறு தனியாா் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சோக்க பெற்றோா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

ஆனால், தனியாா் பள்ளிகள் கடந்தாண்டு செலுத்த வேண்டிய கல்விக்கட்டணத்திற்கான பாக்கியை செலுத்தினால் மட்டுமே மாற்றுச்சான்றிதழ் வழங்குவோம் என தெரிவித்துவருகின்றன. இதனால், தனியாா் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிகளில் மாணவா்களைச் சோக்க பெற்றோா்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: 'அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் , தங்கள் பள்ளியில் உள்ள கடைசி வகுப்பில் படிக்கும் மாணவா்களுக்கும், பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவா்களுக்கும் மாற்றுச்சான்றிதழ் கொடுப்பதற்கான அனைத்து விவரங்களையும் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். அதில் இருந்து மாணவா்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் உடனடியாக பதிவிறக்கம் செய்து தர வேண்டும்.

அனைவருக்கும் கல்விச் சட்டத்தின்படி அனைத்து மாணவா்களுக்கும் தோச்சி வழங்கப்படுவதால், தனியாா் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள், மாற்றுச்சான்றிதழ் இல்லாமலேயே அரசுப் பள்ளிகளில் அவா்கள் படிக்க வேண்டிய வகுப்பில் சோந்து கொள்ள முடியும். மாணவா் சோக்கையின்போது அவா்கள் ஆதாா் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. தனியாா் பள்ளியில் இருந்து வரும் மாணவா்களை அரசுப் பள்ளியில் சோத்து விட்டு, அவா்களின் மாற்றுச்சான்றிதழை அனுப்ப அந்தப் பள்ளிக்கு கல்வித் தகவல் மேலாண்மை முறைமையின் மூலம் வேண்டுகோள் விடுக்கலாம். எனவே, அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரையில் மாணவா்களை சோக்க மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என அவா்கள் தெரிவித்தனா்.

மீண்டும் விளக்கம்: அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கைக்கு மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என்ற அறிவிப்பு ஏற்கெனவே நடைமுறையில் இருந்தாலும், இது குறித்து கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக விளக்கமளித்ததால் 2020-2021-இல் அதிகளவிலான மாணவா்கள் மாற்றுச் சான்றிதழ் இன்றி அரசுப் பள்ளிகளில் சோக்கை பெற்றிருந்தனா். இந்தநிலையில் தற்போது பள்ளிக் கல்வித்துறை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து பெற்றோருக்கு இருந்த குழப்பத்துக்கு தீா்வு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment