Breaking

Friday, 25 June 2021

அரசு பாலிடெக்னிக் சேர்க்கைக்கு அழைப்பு

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், 2021-22ம் கல்வி ஆண்டின் முதலாமாண்டு முழுநேர பட்டய படிப்புக்கு, இணைய தளத்தில் இன்று முதல் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்தை, https://www.tngptc.in அல்லது https://www.tngptc.com என்ற இணைய தளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். 

அவ்வாறு இயலாதோர், மாவட்ட சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணம், 150 ரூபாய். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஜூலை, 12க்குள் பதிவு செய்ய வேண்டும். 

தகவல், வழிகாட்டி, கால அட்டவணையை, https://www.tngptc.in, https://www.tngptc.com மூலம் அறியலாம். நேரடி இரண்டாமாண்டு, பகுதி நேர பட்டய சேர்க்கை அறிவிப்பு, பின்னர் வெளியிடப்படும். விபரம் அறிய, 044-22350523, 99520-75465, 99407-35303, 73977-83433 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment