பி.எட்., - எம்.எட்- உள்ளிட்ட படிப்புகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், ஆன்லைன் வழி செமஸ்டர் தேர்வு நடத்த ஒப்புதல்-
தேர்வுகள் வரும் 24 -ல் தொடக்கம்.: CLICK DOWNLOAD
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பொறுப்பு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன், கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
உயர்கல்வி துறை செயலகத்தில், பல்கலைகளின் துணைவேந்தர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், கடந்த வாரம் நடந்தது. அதில்
எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், ஆன்லைன் வழி செமஸ்டர் தேர்வு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எனவே, 2021 ஜூனில் நடக்கும் செமஸ்டர் தேர்வுகள், வரும், 24ம் தேதி ஆன்லைன் வழியில் நடக்கும். இதில் பங்கேற்க உள்ள நடப்பு கல்வி ஆண்டு மாணவர்கள் மற்றும் அரியர் மாணவர்கள், கல்லுாரிகளில் வழிமுறைகளை தெரிவித்து, தேர்வு கட்டணம் செலுத்தவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Friday, 4 June 2021
பி.எட்., - எம்.எட்- உள்ளிட்ட படிப்புகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், ஆன்லைன் வழி செமஸ்டர் தேர்வு நடத்த ஒப்புதல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment