தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது குறித்து தமிழக அரசு போட்ட அந்த ஆறு உத்தரவு.
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான வகுப்பு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பள்ளிகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவிப்பு அரசு வெளியிட்டுள்ளது.
சென்னையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் மாணவர் சேர்க்கை ஆன்லைன் கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் புதுப்பிக்காத பள்ளிகளுக்கு அடியாக தங்களது பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணத் தொகையில் தனியார் பள்ளிகள் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 75 சதவீத கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு பள்ளியும் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது.
கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பிலிருந்து தனியார் பள்ளிகள் நீக்கக் கூடாது என்று அறிவுறுத்தபட்டுள்ளது. அதே போல பள்ளிகளில் சீருடை, பேருந்து கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கேட்டால் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு செயல்பாடுகளை அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளி முதல்வர்கள் கண்காணித்து புகார்களுக்கு இடமின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எக்காரணம் கொண்டும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களை நீக்கவோ, கற்பித்தல் செயற்பாடுகளை பங்கேற்பதை தவிர்க்கவோ கூடாது எனவும் முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment