ஈரோடு மாவட்டத்தில் என்.எம்.எம்.எஸ்., தேர்வு எழுதிய, ?,770 பேரில், 242 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,), எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.
தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு, மாதம், 1,000 ரூபாய் வீதம், பிளஸ் 2 முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நடப்பாண்டுக்கான தேர்வு, கடந்த பிப்., 21ல் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 37 மையங்களில், ?,770 பேர் தேர்வு எழுதினர்.
தற்போது முடிவு வெளியாகியுள்ளது. இதில், 242 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment