Breaking

Wednesday, 26 August 2020

NEET 2020 - EXAM HALL TICKET PUBLISHED ( DOWNLOAD NOW )


செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

NEET 2020 - EXAM HALL TICKET - DOWNLOAD here...

நாட்டில் வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளிவைக்க கோரிக்கை வலுத்தபோதிலும் திட்டமிட்டப்படி தேர்வு நடத்த ஏற்பாடு செய்து ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டு மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.nta.neet.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து 2020ம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 13% குறைந்தது பல்வேறு தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் நீட் தேர்வுக்கு தேசிய அளவில் கூடுதலாக 74,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

தமிழகத்தில் இருந்து 1,17,990 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.  இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 13% அதாவது சுமார் 17 ஆயிரம் மாணவர்கள் குறைவாகும். அதே நேரத்தில், பீகார், உத்தரப் பிரதேசம், அசாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment